பிரபல ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பிரபல நடிகையின் பரபரப்பான பேட்டி

254

சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடித்து வரும் கதாநாயகிகளைப் போல சின்னத்திரையில் நடித்து வரும் கதாநாயகிகளுக்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்புப் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் ஹிந்தி சீரியல்களில் நடித்து வருபவர் தான் தேவோலீனா பட்டாச்சார்ஜி. இவர் பரத நாட்டியக்கலைஞராகவும் இருக்கின்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவயதில் தான் எதிர்கொண்ட பாலியல் வன்முறை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது எம் ஊரில் பிரபல ஆசிரியல் ஒருவர் இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்கு செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு நண்பர்களும் அவரிடம் தான் டியூஷனுக்குச் சென்றனர்.

நானும் அவரிடம் டியூஷனுக்கு சென்றேன். திடீரென்று ஒரு வாரம் என்னுடைய நண்பர்கள் டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர். அப்புறம் நான் மட்டும் அவரிடம் டியூஷன் சென்றேன். அப்போது ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து நடந்த சம்பவம் குறித்து அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம் புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து அவர்கள் சொல்வதை கேட்டு கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.