• Feb 03 2023

வாரிசு படக்குழு மறைத்து வைத்திருந்த ரகசியம்-கசிந்த உண்மை..அட இதை யாருமே எதிர்பார்க்கலையே..!

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான்  வாரிசு. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளிவந்த ரஞ்சிதமே பாடலும், சமீபத்தில் வெளிவந்த தீ தளபதி பாடலும் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றது.

எனினும் இதை தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதிக்குள் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.


வாரிசு படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் இருந்தாலும், படத்தின் முக்கியமான வில்லனாக யார் நடித்துள்ளார் என்று பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மை என்று தெரியவரவில்லை.


இவ்வாறுஇருக்கையில், தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது என தெரியவந்துள்ளது. ஆம், வாரிசு படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளாராம்.

மேலும்  இப்படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வாரிசு படக்குழு வீடியோ முழு தெரிவித்துள்ளனர்.மேலும்  அந்த வீடியோவில் எஸ்.ஜே. சூர்யாவும் தோன்றியுள்ளார். இதன்முலம் தான் இப்படத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 





Advertisement

Advertisement

Advertisement