• Apr 01 2023

ஆஸ்கார் விருது விழாவிற்கு செம ஸ்டைலாக கிளம்பிச் சென்ற ஆர்ஆர்ஆர் படக்குழு-வெளியாகிய போட்டோஸ்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


திரையுலகின் உயரிய விருது ஆஸ்கர். இதன் 95வது விருது வழக்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது.95வது ஆஸ்கர் விருது நாமினேஷன் பட்டியலில் நம் இந்திய சினிமாவில் இருந்து original song என்ற பிரிவில் நாட்டு நாட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இந்திய சினிமாவையே பெருமைப்படுத்தும் விதமாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற இந்த நாட்டு நாட்டு பாடல் original song என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


இசையமைப்பாளர் கீரவாணி இவ்விருதை பெற்றுக்கொண்டார். இதன்மூலம் இந்திய படத்துக்காக ஆஸ்கர் விருது பெறும் முதல் இசையமைப்பாளர் என்கிற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். இப்பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஆஸ்கார் விருது விழாவிற்குச் சென்ற ராம்சரண் மற்றும் ஜுனியர் என்ட்ரியாரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement