• Dec 01 2022

வசூல் வேட்டையில் மாஸ் காட்டும் 'கலகத் தலைவன்'... 3ஆவது நாளே இத்தனை கோடியா..!

Listen News!
Prema / 1 week ago
image
Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உட்படப் பல திரைப்பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.


மேலும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படமானது நேர்த்தியான திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தின் கதாநாயகனான உதயநிதியின் தோற்றம் மற்றும் அவரது நடிப்பை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி உள்ளனர். 

அதுமட்டுமல்லாது ஆரவ்வின் நடிப்பும் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் அவர் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அதே போல நிதி அகர்வாலின் அழகான நடிப்பையும் அனைவரும் பாராட்டி வருகிறார்.


அத்தோடு திரில்லர், சஸ்பென்ஸ் ஐ படத்தின் கடைசி வரை கொண்டு வந்து படத்தை கச்சிதமாக இயக்கி இருக்கிறார் மகிழ் திருமேனி. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரைப்படத்தின் 3ஆவது நாள் வசூல் விபரம் வெளியாகி இருக்கின்றது.

அதாவது 3 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 6 கோடிக்கு மேல் இத்திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் படம் கண்டிப்பாக எதிர்வரும் நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தும் எனப் பலரும் கூறி வருகின்றனர்