• Sep 27 2022

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிச்சாச்சு

Listen News!
stella / 3 days ago
image
Listen News!

 சமந்தா நடிக்கும் பான் இந்திய புராண திரைப்படமான சகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்த படியாக முன்னணி நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இவரது நடிப்பில் தற்பொழுது  “சகுந்தலம்” என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது.


சகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகிறார், மணிசர்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.பிரபல நடிகர் அல்லு அர்ஜீன் மகள் அல்லு அர்ஹா இப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.சார்பில் நீலிமா குணா, இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.


தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சகுந்தலம் படத்தில் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர். இந்த படம் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%