நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் லைன் கட்டியுள்ளன. தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா43 படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணையவுள்ளார் சூர்யா. இந்தப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யா அடுத்தடுத்த தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என சூர்யாவின் படங்களின் வெற்றி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரமோ ஆகியவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை மிரட்டியது.
இந்நிலையில் மும்பைக்கு அடிக்கடி சென்று வருவது குறித்தும் அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுவது குறித்தும் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மிகவும் கூலாக பதிலளித்தார் சூர்யா. தான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் பரப்பப்படுவதை சுட்டிக் காட்டிய சூர்யா, தன்னுடைய குழந்தைகள் மும்பையில் தங்கி படித்து வருவதால் அவர்களை பார்க்கவே தான் அடிக்கடி மும்பை செல்வதாக சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
நான் எங்கயும் போகலப்பா, சென்னையிலதான் இருக்கேன் என்றும் சூர்யா, தனக்கேயுரிய நகைச்சுவையுடன் பதிலளித்தார். முன்னதாக சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாகவும், சூர்யா அதிகமான படங்களை பாலிவுட்டில் தயாரிக்கவுள்ளதாகவும் நடிக்க திட்டமிட்டு வருவதாகவும் அதையொட்டியே அவர் மும்பையில் செட்டில் ஆனதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் ஜோதிகாவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதன் காரணமாகவே சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
Listen News!