• Apr 23 2024

பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்- தனது மறைந்த மகள் குறித்து கபிலன் போட்ட உருக்கமான பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  20 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதி இருக்கும் பாடலாசிரியர் தான் கபிலன். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால் சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முதல் இவருடைய மகள்  தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த தகவல் அனைத்து திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மேலும், தூரிகையின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தான் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.


இப்படி ஒரு நிலையில் தன் மகளின் பிரிவால் வாடும் கவிஞர் கபிலன் தன் மகளை எண்ணி உருக்கமான கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார்.

எல்லா தூக்க மாத்திரைகளையும்அவளே போட்டுக் கொண்டால்நான் எப்படி தூங்குவேன்..!எங்கே போனாள்என்று தெரியவில்லைஅவள் காலனி மட்டும்என் வாசலில்..மின் விசிறிகாற்று வாங்குவதற்கா..உயிரை வாங்குவதற்கா..?

அவள் கொடுத்ததேனீர் கோப்பையில்செத்து மிதக்கிறேன் எறும்பாய்..? அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்குத் தெரியாது அவளே என் கடவுள்..!


குழந்தையாகஅவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்றபாரம் இன்னும் வலிக்கிறது.கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமாகண்களின் வலி.யாரிடம் பேசுவதுஎல்லா குரலிலும்அவளே பதிலளிக்கிறாள்.கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பி இருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு பகுத்தறிவாளன்ஒரு கடவுளைபுதைத்து விட்டான்..!

இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்கு வந்த கோரியரை பற்றி பதிவு ஒன்றை போட்டுள்ள கபிலன் ‘கொரியர் இளைஞனிடம் உனக்காக கையெழுப்பமிட்டிருக்கிறேன் கடைசியில் உன்னையே கையொப்பமிட்டு தான் வாங்கினேன்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement