BMW காரை தொடர்ந்து மற்றொரு புதிய கார் வாங்கிய குக்வித் கோமாளி பிரபலம்-அவரே வெளியிட்ட தகவல்..!

186

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் மணிமேகலை

கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.அத்தோடு Mr&Mrs சின்னத்திரை,குக்வித் கோமாளி போன் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இதைத்தாண்டி மணிமேகலை தனெக்கென ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதிலும் மிகவும் ஆக்டீவாக வீடியோக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளார்.தனது கமெடி கலந்த பேச்சும் எல்லோர் மத்தியிலும் இவரை கவர்ந்தது.

இன்ஸ்டாவிலும் மணிமேகலை ஏதாவது புகைப்படங்கள் போட்டுக்கொண்டே இருப்பார். அப்படி அவர் புதியதாக BMW கார் வாங்கிய புகைப்படத்தை போட ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

எனினும் மீண்டும் மணிமேகலை புதிய கார் வாங்கியுள்ளாராம். புதிய காருடன் மணிமேகலை அவரது கணவர் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..