• Apr 18 2024

நயன்-விக்கி இருவருடைய சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 7 வருடங்களாக காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்திலுள்ள ஹொட்டல் ஒன்றில் கடந்த ஜுன் 9ம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமண நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் எனப் பலரும் வந்திருந்தனர். திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

திருமணத்தின் பின் நேற்றைய தினம் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தனர்

இவ்வாறு இருக்கையில் இவர்களின் சொத்து மதிப்பு பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்திய விமானப் படையில் பணியாற்றியவரின் மகளாக பிறந்து இப்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா.

ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறும் இவரது சொத்து மதிப்பு ரூ. 71 கோடி வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது.

அத்தோடு ரூ. 1 முதல் ரூ. 3 கோடி வரை படத்திற்கு சம்பளம் பெறும் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement