• Jan 27 2023

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்... வெளியானது ப்ரோமோ..!

Listen News!
Prema / 4 weeks ago
image

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றே பிக்பாஸ். 21 போட்டியாளர்களுடன்  ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 6இல் தற்போது அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன்,ரச்சிதா உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

அதுமட்டுமல்லாது இந்நிகழ்ச்சியானது நிறைவடைய இன்னும் குறுகிய காலமே இருப்பதால் இனிவரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்த வார டாஸ்க்கான Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் மணிகண்டனின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். அந்தவகையில் மணிகண்டனின் மனைவி, மகன், அம்மா ஆகியோர் வந்திருந்தனர். அதுமட்டுமல்லாது அவரது தங்கையான பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வந்துள்ளார். அத்தோடு மணிகண்டன் ஒவ்வொருவரையும் கட்டியணைத்து வரவேற்கின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement