• Apr 19 2024

பிக்பாஸ் வீட்டில் நல்லவர் என்ற முகமூடி அணிந்திருப்பது இவரா... போட்டு வாங்கிய கமல்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6ஆனது தற்போது 5ஆவது வாரத்தை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது தற்போது சண்டை, சச்சரவிற்கு பஞ்சமில்லாமல் த்ரில்லிங்காக ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறுகின்ற சலசலப்புக்களும், முகச்சுளிப்புக்களும் தான்.

ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கி உள்ளார்கள். இதனை குத்திக் காட்டும் வகையில் இன்றைய முதலாவது ப்ரோமோவிலே "இதுதான் இவங்க உண்மையான முகமா" என்று கமல் கூறி இருந்தார்.


இதனைத் தொடர்ந்து தற்போது 2ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் "நல்லவர் என்ற முகமூடி அணிந்திருப்பவர் யார்" என்ற கேள்வியைக் கமல் கேட்கின்றார். அதற்கு மணிகண்டன் "அப்படி யாரையுமே இன்னும் நான் பார்த்ததில்லை" என்கிறார்.

மேலும் அமுதவாணன் எழுந்து மணிகண்டனைக் கூறுகின்றார். அதற்கு கமல் இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், விளையாட்டை விளையாட்டாக நினைக்காதீர்கள் எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய இரண்டாவது ப்ரோமோ அமைந்திருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement