• Apr 20 2024

இயக்குநர் கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு புதிய கிளாசிக் 350 பைக்கை பரிசளித்த தயாரிப்பாளர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் வெந்த தணிந்தது காடு. இப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருந்ததோடு கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.

சிம்பு நடிப்பில் உருவாகிய இப்படம் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு புதிய கிளாசிக் 350 பைக்கை பரிசளித்துள்ளார். பிரபல சேனலின் GVM Fans Festival நிகழ்ச்சியில் கௌதம் மேனன் & ஐசரி கணேஷ் கலந்து கொண்ட போது இந்த பரிசளிப்பு நடந்துள்ளது.

இந்த ராயல் என்ஃபீல்டு புதிய கிளாசிக் மாடல் இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆனது 349சிசி பிஎஸ்6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 20.2 பிஎச்பி ஆற்றலையும் 27 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. 


முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த கிளாசிக் 350 பைக் 195 கிலோ எடையும், 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் சேமிப்பு கலனை கொண்டது. லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரவல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement