• Mar 28 2024

அஜித்தின் AK62 திரைப்படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர் - அடடே இவரா?- கரெக்டாத்தான் எடுத்திருக்கிறாங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் தற்பொழுது துணிவு என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு பொங்க் பண்டிகையை முன்னிட்டு 11ம் திகதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதனால் இரு படங்கள் மீதும் ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகமாக உள்ளது.இதனை அடுத்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக AK62 என்று அழைக்கப்படுகின்றது.சில நாட்களுக்கு முன்பு, இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளங்களில் "இப்போது AK62 என்ற பெரிய வாய்ப்பில் கவனம் செலுத்துகிறேன்!" என்று தெரிவித்திருந்தார்.


 இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்கும் வில்லனை டிக் செய்துவிட்டதாக தெரிகிறது. அதன்படி இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சாமி அணுகப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


“அரவிந்த் சாமி, தனது இரண்டாவது இன்னிங்ஸில், அவர் நடிக்கும் கதாபாத்திரங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமி பொருத்தமானவர் என்று தயாரிப்பாளர்கள் கருதினர். இப்போது அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவர் அஜித்தின் 62-வது படத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என படத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement