• May 29 2023

ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தியது எதனால்..? முதன் முதலாக உண்மையை உடைத்த போலீஸ் அதிகாரி..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரமாண்டமாக மாலை நேரத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ரஹ்மான் பாடிக் கொண்டுருந்தபோது போலீஸ் அதிகாரி சந்தோஷ் பாட்டில் மேடைக்கு சென்று அவரிடம் இரவு 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி இல்லை என்று கூறியதும் நிகழ்ச்சியை உடனே நிறுத்திக் கொண்டார் ரஹ்மான்.


இதனால் ரசிகர்கள் பலரும் இசைப்புயலுக்கே இந்த நிலையா எனக் கேட்டு அந்த போலீஸ் அதிகாரியை சமூக வலைத்தளங்களின் வாயிலாக திட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து சந்தோஷ் பாட்டில் பேட்டி ஒன்றில் நடந்த உண்மையைக் கூறியுள்ளார்.

அதாவது "நான் என் வேலையை தான் செய்தேன். இது குறித்து மேலும் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஒரு போலீஸ் அதிகாரியாக நான் மீடியாவுக்கு பேட்டிகள் கொடுக்கக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் சத்தமாக இசைக்க அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 


இதையடுத்தே நான் மேடைக்கு சென்று ரஹ்மான் மற்றும் அவரின் குழுவினரை பாடுவதை நிறுத்தச் சொல்ல வேண்டியதாகிவிட்டது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இசை நிகழ்ச்சி நடந்ததால் எனக்கு வேறு வழி தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement