• Apr 19 2024

ஆர்.கே வீட்டில் நடந்த கொள்ளை... நகைகள் மீட்பு.. 3பேர் கைது... கச்சிதமாக செயற்பட்ட போலீஸார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன். இவர் 'அழகர் மலை, வைகை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது 'அவன் இவன்' என்ற படத்தில் ஜமீந்தாரை கொல்லும் கொடூர வில்லனாக நடித்திருப்பார். அத்தோடு 'ஜில்லா' படத்திலும் விஜய், மோகன்லாலுக்கு வில்லனாக சில காட்சிகளில் வந்து மிரட்டி இருப்பார். 


இவரின் வீட்டில் தான் சமீபத்தில் கொள்ளை இடம்பெற்று இருக்கின்றது. அதாவது கடந்த 10 ஆம் தேதி சென்னையில் அடைமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் புறநகரான நந்தம்பாக்கத்தில் இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நடிகர் ஆர்.கேவின் வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று கத்தி முனையில் ஆர்கே மனைவியை மிரட்டி அவரை கட்டிப்போட்டு 200 சவரன் நகைகளை நொடிப் பொழுதில் கொள்ளையடித்துச் சென்றது.


அதாவது நடிகர் ஆர்கேக்கு தண்ணி காட்டும் வகையில் வீட்டில் வேலைக்காரனாக சேர்ந்த நேபாளி வேலைக்காரன் ரமேஷ் என்பவர் தான் இத்தனை நாளாக ஆர்கே வீட்டை நோட்டமிட்டு ஆர்கே வீட்டில் நகை பணம் புழங்கும் இடங்களையும் அறிந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திட்டமிட்டு ஆர்கே ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் அந்தக் கும்பலுடன் புகுந்து அவர் மனைவியை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 200 சவரன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

அதன் பின்னர் இந்தக் கொள்ளை கும்பல் நேபாள் தப்பிச் செல்ல திட்டமிட்டதை அறிந்த போலீஸார், வேலைக்காரன் நேபாளம் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க குறிப்பாக கொள்ளையர்களை பிடிக்க 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து சில நாட்களாக தேடி வந்தனர்.

அதாவது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், நேபாளுக்கும் அந்தத் தனிப்படை விரைந்து சென்று செயற்பட்டது. இவ்வாறாக நேபாள் நாட்டை சேர்ந்தவர்களுடன் இணைந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையை போலீஸார் நடத்தி வந்தனர்.


அந்தவகையில் 5 நாட்களுக்கு மேலாக நேபாளத்தில் முகாமிட்ட போலீஸார் கொள்ளைக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட ஆர்கே வீட்டு வேலைக்காரன் ரமேஷ் உட்பட 3 கொள்ளையர்களை கைது செய்தனர். அதாவது ஆர்கே வீட்டில் காவலாளியாக பணிப்புரிந்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான கிருஷ்ணா, கரண் ஆகிய 3 பேரே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.  

அவர்களிடம் இருந்து 150 சவரன் நகையை போலீஸார் மீட்டெடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 3 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதும் குண்டு கிருஷ்ணா என்பவர் இந்த கொள்ளை திட்டத்திற்கு பக்க பலமாக மற்றும் மூளையாக செயற்பட்டுள்ளதும், காவலாளி ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் அனைவராலும் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த மூன்று பேரிடமும் போலீஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வந்த வண்ணமே இருக்கின்றனர். அத்தோடு தலைமறைவாக உள்ள குண்டு கிருஷ்ணா, ஹரக் தேவகொட்டா உள்ளிட்ட மூவரை பிடிக்கவும் மீதமுள்ள நகைகளை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை சென்னை கொண்டு வரும் நடவடிக்கையும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement