• Dec 01 2022

அசல் கோலார் எனக்கு இப்படிப்பட்டவர் தான்..பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பலவற்றை போட்டுடைத்த நிவாஷினி..!

Listen News!
Aishu / 1 week ago
image
Listen News!

ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 6 சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினி எலிமினேஷன் செய்யப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் சில ஊடகங்களுக்கு பிரத்தியோக பேட்டி கொடுத்துள்ளார்.அதில் பல விடயங்களை பேசி உள்ளார்.அதில் கூறியதாவது...

உள்ள போன பிறகு எனக்கு அசல் பற்றி அவ்வளவா தெரியாது .அதனால் அவர பற்றி தெரிஞ்சுகொள்ள நினைத்தேன். அவருடைய முழுகதையையும் கேட்டு தெரிந்துகொண்டபின்னர் எங்களுக்குள் நிறைய கலந்துரையாடல் அதிகமானது. அது குடும்பம் வாழ்க்கை எதிர்காலம் சம்பந்தமாக இருந்தது.அந்த நட்பு நேர்மையாகவும் இருந்தது.அது எவ்வாறெனின் எந்த கஸ்ரமான நேரத்திலையும் எனக்காக அவர் பேசி இருக்கார். தோள் கொடுத்திருக்கேர்.


அவர் வீட்டு விட்டு போனபிறகு ஒரு பிரச்சனை வந்தது அந்த நேரம் அவர் இருந்தா நல்லா இருக்கும் என்று கவலைபட்டதும் உண்டு என்று கூறி இருந்தார்.இதனைவிட நீங்க விளையாட்டில கவனம் இல்லை என்று சொன்ன நேரம் நீங்க என்ன feel  பண்ணிங்க என்று வினாவிய போது நிவாசினி இவ்வாறு கூறியிருந்தார். அதாவது  கோவம் என்பதை தாண்டி என்னால புரிந்து கொள்ள தெரியவில்லை. ஏன் ஒரு பையனும் பொண்ணும் நட்பா பழக்கூடாதா என்று கேட்கணும் போல இருந்துது அது மட்டுமல்லாமா என்னுடைய நாட்டில் ஆண்பெண் நட்பு சகஜம். என்று கூறி இருந்தார்.

அடுத்து அவரிடம் இப்போது நீங்க உங்க பிக்பாஸ் மொத்த அனுபவத்தை சொல்லுங்க என கேட்டபோது பின்வருமாறு பதிலளித்து இருந்தார்.

 அதாவது மொத்தமாக சொல்லவேண்டும் என்றால் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம்.உள்ளே போகும் போது எது வந்தாலும் அது ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையுடனேதான் சென்றேன்.இதனைவிட நான் சண்டைபோடணும் , கத்தணும் அப்படித்தான் உள்ளே போனேன்.ஆனால் அங்கு போன பிறகுதான் புரிந்தது எல்லோரும் வலிமையான போட்டியாளர்கள் என்று.அதைவிட உள்ள இருக்கிற எல்லோருடனும் பழகினாலும் குயின்சி என்னுடைய சகோதரி மாதிரி அதனால் எனக்கும் அவருக்கும் இடையே அதீத அன்பு உண்டு. 


இப்படி சொன்ன நிவா அடுத்த போட்டியாளர்கள் அண்ணன் தங்கையா பழகினது சரியாக இல்லை என கூறினார். நீங்க இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து விளையாடடும் போது அனைவரையும் போட்டியாளராக மட்டும் பார்த்தால் போதும் என்றார்.அது பற்றி வினவிய போது எங்களுக்குள்ள நாங்க இந்த உணர்வில் இருந்தாலும் விளையாட்டு எண்ணும் போது நாங்கள் விளையாட்டில்தான் முழுகவனமும் செலுத்தினோம் என்றும் கூறி இருந்தார்.

தனிப்பட்ட பிரச்சனைகளை வைத்து உங்களை உள்ளே நோமினேட் செய்த்தை பற்றி கேட்ட போது தனக்கு அது உள்ளே இருக்கும் போது தெரியாது .வெளியே வந்தபிறகுதான் தெரிந்தது என கூறி உள்ளார்.இப்போது அதை பார்க்கும் போது உள்ளே அவர்கள் எவ்வாறெல்லாம் நடித்தார்கள் என எண்ணும் போது கவலையாக இருக்கிறது என கூறி இருந்தார்.அடுத்த கேள்வியாக எவ்வளவு நாள் உள்ள இருப்பேன் என்ற நம்பிக்கையுடன் சென்றீர்கள் இப்ப சடுதியாக வந்ததை பற்றி என்ன நினைக்கிறிங்க என்று வினாவப்பட்டது. இதற்கு,நான் இறுதி இரண்டு வாரமும் உற்சாகத்துடன் வேலை செய்தேன் ஆனாலும் ஏன் வெளியே அனுப்பபட்டேன் என்று தெரியவில்லை என்றவறாக பதிலளித்துள்ளார்.இதைவிட பிரச்சனை ஏற்படும் சர்ந்தர்பங்களில் அந்தந்த நபர்களிடம் தான் தனியாக சென்று பேசியதோடு மட்டுமன்றி தனக்கு சத்தமாக கத்தி பேச வராது என்றும் கூறி இருந்தார்.அதற்காக தான் முயற்சி செய்யாமல் இல்லை முயற்சி செய்த போது அது எனக்கே நன்றாக இல்லை என தோன்றியதால் அதனை நிறுத்திவிட்டேன் என கூறினார்.

அசீம் பற்றி வினவிய போது எப்பொழுது பார்த்தாலும் அவர் சண்டைபோடுற மனநிலையிலேயாதான் இருக்கின்றார் என்பதுடன் சில நேரங்களில் அவர் அடுத்தவருக்கு அடித்துவிடுவாரோ என்று பயந்ததும் உண்டு என கூறி உள்ளார்.இதைவிட ஒரு கட்டத்துக்குமேல அவங்க கத்திறது எல்லாம் பழகிவிட்டது என்றும் கூறி இருந்தார்.உங்களை இளவரசியா யாருமே வொட் பண்ணல அதனைபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்டபோது ரொம்ப ஈசியா ஏன் என்றால் யாருமே என்னை இளவரசியாக நினைக்கல என்று பதிலளித்தார். வெளியே வந்து அந்த எபிசொட் பார்த்து தான் கவலை கொண்டதாகவும் தன்னம்பிக்கை இழந்ததாகவும் கூறினார்.இதைவிட எல்லோரும் என்னை பேசு நிவா பேசு நிவா என்றபோது அட நான் பேசிட்டுத்தானே இருக்கிறேன் என தோன்றியதாகவும் கூறினார்.இவற்றோடு சில பெயர்களை கொடுத்து இது அங்கு இருந்த போட்டியாளர்களில் யார் யாருக்கு பொருத்தும் என கேட்கப்பட்ட வினாவுக்கு நிவா பின்வருமாறு பதிலளித்துள்ளார்.

1.silent killer-ஜனனி

2.strong contesttent-சிவின், விக்ரமன்

3.irrtating contestent- அசீம்

4.kind contestent- நிவா என்று தன்னைதானே கூறினார்.

இவ்வாறாக எல்லா கேள்விகளுக்குமே இயல்பாக பதிலை வழங்கி இருந்தார்.