• Dec 01 2022

நிவாஷினியிடம் அசல் பேசிய ஆபாச பேச்சு.. கமலை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்-நடந்தது இது தான்..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

 கடந்த வாரமே அசல் கோலார் பற்றி பிக் பாஸ் ரசிகர்கள் வைத்த குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது கமல் கண்டித்து இருந்தால், இந்த வாரம் இந்தளவுக்கு பையன் ஓவர் ஆட்டம் போட்டிருக்க மாட்டான் என நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமலையும் விளாசி வருகின்றனர்.இதுவரை பிக் பாஸ் தமிழ் வீட்டில் இப்படியொரு மோசமான வெறிபுடிச்ச போட்டியாளரை பார்த்ததே இல்லை என ரசிகர்கள் பலரும்  திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஆடும் வரை ஆடு, இந்த வாரம் வெளியே அனுப்ப போறோம்னு சொல்லிட்டாங்களா.. இப்படி எல்லை மீறிய ஆபாச பேச்சுக்களையும் செயல்களையும் செய்து வருகிறார் அசல் கோலார் என ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு எதிராக கண்டனங்களை அடுக்கிக்கொண்டு வருகிறார்கள்.

அசல் கோலார் காலை முதல் நள்ளிரவு வரை என எப்போ டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் ஸ்ட்ரீமிங் பார்த்தாலும், ஏதாவது ஒரு சில்மிஷம் செய்து கொண்டே இருக்கிறார் என நெட்டிசன்கள் புகார் அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவர் செய்யும் லீலைகளை வீடியோ க்ளிப்பாக சமூகவலைத்தளத்தில் எடுத்துப் போட்டு என்ன என்னவெல்லாம் கெட்ட வார்த்தையில் திட்டமுடியுமோ அப்படியெல்லாம் திட்டி வருகின்றனர்.

அசல் கோலாருக்கு அதிகமாக இடம் கொடுத்து வரும் நிவாஷினி சக போட்டியாளர்கள் தப்பாக பேசுவதை கேட்டு கேமரா முன்பாக புலம்பும் காட்சிகள் எல்லாமே அவருக்கு பைத்தியம் முழுதாக முத்திவிட்டதென நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நாளை கேலண்டர்ல குறிச்சி வச்சிக்கோங்க.. இனிமே இப்படி நடக்காதென கேமராவை பார்த்து நிவா பேசி வரும் வீடியோவும் ட்ரெண்டாகி வருகிறது.

ஒரு பெண்ணிடம் பேசுகிறோம் என்றால் எந்தளவுக்கு கண்ணியமாக பேச வேண்டும் என்றோ நமது அசைவுகளை கேமராக்கள் காட்டுமே என்றும் கொஞ்சம் கூட இல்லாமல் பல்லைக் கடிப்பது, நாக்கைக் கடிப்பது, நிவாஷினியின் கையைக் கடிப்பது, முத்தம் கொடுப்பது என கேமராக்கள் இருப்பதை மறந்து ஏதோ மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்றதை போல அட்டகாசம் செய்து வருகின்றார்.நிவாஷினியை அப்படியே திருப்பி அவரை பார்த்து ஆபாச செய்கைகள் செய்து.. என்னன்னு தெரியல, அப்படியே ஒரு மாதிரி இருக்கு என பேசிய வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து அசல் கோலாரையும் அவருக்கு இப்படி இடம் கொடுத்திருக்கும் நிவாஷினியையும் இந்த வாரம் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜிபி முத்து சென்றாலும், அந்த ஷோவை டிரெண்டாக்கி விட்டதே தற்போது அசல் கோலார் மற்றும் நிவாஷினியின் இந்த காதல் கசமுசா லீலைகள் தான் என ஒரு பக்கம் அசலுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் அசல் தன்னை மன்மதன் சிம்புன்னு நினைச்சிட்டு இருக்காரு.. ஆனால், உண்மையில் அவர் ஐ கருவாடு வடிவேலு தான் என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

அசல் கோலார் நிவாஷினியிடம் பழகுவதை போலவே அத்துமீறி குயின்ஸி உள்ளிட்ட மற்ற பெண் போட்டியாளர்களையும் ரொம்பவே மோசமாக தொட்டு விளையாடி வருகிறார்.அத்தோடு  அவரது பேட் டச் பார்த்து பிடிக்காமல் கடுப்பான குயின்ஸி உடனடியாக அசலை முறைத்த நிலையில், அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். யாரெல்லாம் கம்முன்னு இருக்காங்களோ அவங்களிடம் எல்லை மீறி தொடுவதையே வேலையாக வைத்திருக்கும் அசல் கோலார் எல்லாம் இந்த கேமில் இருக்கவே கூடாதென ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

அத்தோடு கடந்த வாரமே இந்த கன்றாவியை எல்லாம் கமல் தட்டிக் கேட்டிருந்தால், இந்த வாரம் பிக் பாஸ் வீடு ரொம்ப அசிங்கமான காட்சிகளுடன் சென்று கொண்டிருக்காது என நெட்டிசன்கள் இந்த வாரமாவது கமல் ரெட் கார்டு உடன் வந்து அசலை வெளியே அனுப்புவாரா? இல்லை எவிக்ட் கார்டுடன் வந்து வெளியே அனுப்புவாரா என எதிர்பார்த்து வருகின்றனர்.