• Apr 24 2024

'வாரிசு' படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்... இசை வெளியீட்டு விழா நடக்குமா..? கேள்வியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இதுவரை சுமார் 65 படங்களில் நடித்து முடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 66 ஆவது படமாக வாரிசு படம் உருவாகி வருகின்றது. இப்படமானது வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. 


இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் யாவும் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும்சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில், தற்போதே அப்படம் குறித்த அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த வண்ணம் இருக்கின்றன. 

அதாவது பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் தமன் இசையில் வெளியான அம்மா பாடல் விஜய் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது.


இதனைத் தொடர்ந்து வாரிசு இசை வெளியீட்டு விழா தொடர்பாக தயாரிப்பு தரப்பு விளம்பரம் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாது இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய்யை பார்க்கும் ஆசையில் டிக்கெட் வாங்கி வருகிறார்கள் தளபதி ரசிகர்கள். 

இவ்வாறாக விஜய்யை காண ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அதாவது கொரோனா வைரஸின் புது வகை சீனாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த புது வகை தற்போது வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. 

இதையடுத்து தற்போது விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற ஒரு நேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா நடக்குமா என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement