• Sep 27 2022

இதுவரை யாருமே பார்த்திராத 'பில்லா' படத்தின் மேக்கிங் வீடியோ… செம க்யூட்டாக இருக்கும் நம்ம தல..!

Listen News!
Prema / 1 month ago
image
Listen News!

அமராவதியில் ஆரம்பித்த பயணத்தை ஆசை, அசல், அட்டகாசம் எனத் தொடர்ந்து இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித். 'தல' என ரசிகர்களால் சிறப்பாகப் போற்றப்படும் இவர் இதுவரைக்கும் ஏறத்தாள 60 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் 'ஏகே 61' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். அத்தோடு போனி கபூர் தயாரிக்கின்றார். இப்படத்திற்கானஇசையினை ஜிப்ரான் வழங்கியுள்ளார்.

மேலும் 'ஏகே 61' படத்தை தொடர்ந்து தல அஜித் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ஏகே 62' படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.

இவ்வாறாக பல படங்களிலும் நடித்து தனது நடிப்பினை சினிமாவில் நிலை நாட்டி இருக்கின்றார். அவ்வாறான வெற்றிப் படங்களில் ஒன்றுதான் 'பில்லா'. இப்படமானது அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகும்.

2007-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படமானது மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, நமிதா, பிரபு, ரஹ்மான் என பல பிரபலங்களும் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் இத்தனை காலமும் வெளியாகாத இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%