• Apr 19 2024

பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட 'தளபதி 67' படத்தின் முக்கிய உரிமம்.. அடேங்கப்பா நம்பவே முடியல.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நாயகனான விஜய் நடிப்பில் சமீபத்தில் வாரிசு படம் வெளியாகி இருந்தது. இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் 'தளபதி 67' இல் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.


இதனைத் தொடர்ந்து அப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டுகளும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் இதில் நீண்டகால இடைவெளியின் பின் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து மன்சூர் அலிகான், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மேத்யூ, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க இருக்கின்றது.


மேலும் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் படம் குறித்து மற்றுமொரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது படப்பிடிப்பே இப்போது தான் தொடங்கியுள்ளது. ஆனால் படத்தின் டிஜிட்டல் ரூ. 150 கோடிக்கும், சாட்டிலைட் உரிமம் ரூ. 80 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement