• May 29 2023

விஜய் ஆடை மாற்றும்போது கேரவனில் நுழைந்த முக்கிய பிரபலம்... கடுப்பாகிய தளபதி ..நடந்தது என்ன தெரியுமா?

Jo / 6 days ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.

அப்போது விஜய்க்கும் நெப்போலியனுக்கும் நடந்த மோதல் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

போக்கிரி படப்பிடிப்பில் மோதல்:கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2023 இறுதிக்குள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், போக்கிரி படப்பிடிப்பில் விஜய்க்கும் நடிகர் நெப்போலியனுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. கிழக்குச் சீமையிலே, எட்டுப்பட்டி ராசா, விருமாண்டி உட்பட ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் நெப்போலியன். ஐடி கம்பெனி தொடங்கி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன், கடந்த சில நாட்களாகவே விஜய்யை அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

முக்கியமாக விஜய் அவரது அப்பா எஸ்.ஏ.சி இருவருக்குமான பிரச்சினை குறித்து நேரடியாகவே விமர்சித்திருந்தார் நெப்போலியன். அதேபோல், இன்னும் சில பிரச்சினைகளிலும் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். நெப்போலியனின் கமெண்ட்ஸ்களுக்கு எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காமல் விஜய் எப்போதும் சைலண்டாகவே இருந்து வருகிறார். இதற்கெல்லாம் போக்கிரி படப்பிடிப்பில் நடந்த சம்பவம் தான் காரணம் என சொல்லப்படுகிறது.பிரபுதேவா இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் போக்கிரி. விஜய், அசின், பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் நெப்போலியனும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஆக்‌ஷன் ஜானரில் உருவான இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்திருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் விஜய் - நெப்போலியன் சம்பந்தமான காட்சிகளை படமாக்கியுள்ளார் பிரபுதேவா.

அப்போது, அடுத்த காட்சிக்காக விஜய் கேரவனில் டிரஸ் மாற்றிக்கொண்டு இருந்துள்ளார். ஆனால், விஜய் இருப்பது தெரியாமல் நெப்போலியன் அவரது நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு விஜய்யின் கேரவனுக்கு சென்றுள்ளார். அதை எதிர்பார்க்காத விஜய் கேரவன் உள்ளே வந்த நெப்போலியனை கோபமாக திட்டியுள்ளாராம். இதனால், டென்ஷனான நெப்போலியன் உடனடியாக கேரவனில் இருந்து வெளியேறிவிட்டாராம்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்துள்ளார் நெப்போலியன். அதன் தொடர்ச்சியாக தான் தற்போது அடிக்கடி விஜய்யை நெப்போலியன் விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க தயார் என 15 வருடங்களுக்குப் பிறகு நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement