• Mar 28 2024

அசீமுக்கு நடந்த அநியாயம்- குரலை உயர்த்திப் பேசி பொய்யை உண்மையாக்கிய ஷிவின்- இனி என்னென்ன நடக்கப் போகுதோ?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது.வழக்கமாக மற்ற சீசன்களில் 50 நாட்களுக்கு மேல் தான் ஓபன் நாமினேஷன் நடத்தப்படும், ஆனால் இந்த முறை சீக்கிரமாகவே ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டதால் போட்டியாளர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

அந்த வகையில் 44ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். அதாவது ராபேட் மாஸ்டர் ரச்சிதா தனக்கு போஃன் நம்பர் தரல ஆனால் ஆயிஷாவுக்கு கொடுத்து விட்டார் என ரச்சிதாவிடம் செல்ல சண்டை பிடிக்கின்றார். இதனை ரச்சிதா சமாதானப்படுத்துகின்றார்.


இதன் பின்னர் அசீம் இனிமேல் நாமினேஷனில் வராதவர்களை தான் நாமினேட் பண்ணனும் என்று கூறிக் கொண்டு இருந்தார். இதனால் கடுப்பான குயின்சி விக்ரமனிடம் சென்று இது குறித்து புலம்பிக் கொண்டிருக்கின்றார். இதன் பின்னர் இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதற்காக பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி உள்ளது. இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும் மெயின் டோர் கேமரா வழியாக தங்களுடைய வழக்கை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவருக்கான வழக்கை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகளை அசீம் படித்தார்.

போட்டியாளர்கள் அனைவரும் கேமரா முன்பு தங்களுடைய வழக்குகளை பதிவு செய்தனர். இதில், அமுதவாணன் தரப்பு வழக்கறிஞராக அசீம் ஆஜராகி இருந்தார்.அதன்படி அமுதவாணன் ஜனனியை வில்லாக பயன்படுத்தவில்லை என அசீம் தரப்பு  வாதாடியது.அதே போல அந்த கருத்தினைக் கூறிய விக்ரமனுக்கு ஆதரவாக ஷிவின் வழக்காடினார்.


அசீமின் வாதத் திறமையைப் பார்த்து முதலில் சீம் டீமுக்கு வெற்றி வழங்னினார் ஏடிகே. பின் ஷிவின் குழப்பிய குழப்பத்தால் ஏடிகே விக்ரமனுக்கு ஆதரவாக தனது தீர்ப்பினை வழங்கி விட்டார்.இது பார்வையாளர்களை கடுப்பாக்கியது. அதாவது அசீம் நன்றாகப் பேசியும் இவ்வாறு நடந்து விட்டதே என அமுதவாணனும் ஜனனியும் கவலையில் இருந்தனர்.

அத்தோடு மணிகண்டன் கதிரவன் ஆகியோர் அசீம் தரப்பு வாதம் தான் சரியானது. நீ தீர்ப்பை மாத்தி இருக்கக் கூடாது என ஏகேவிற்கு கூறியிருந்தனர். பின்னணி மணிகண்டன் தனது கேஸை பதிவு செய்தார். அதாவது இந்த வாரம் என்னை 4 பெண்கள் நாமினேஷன் செய்து விட்டார்கள் இந்த கேஷை நடத்தப் போகின்றேன் எனத் தெரிவித்தார். இதன் பின்னர் தனலக்ஷ்மி தனது வாதத்தை பதிவு செய்தார்.

அதாவது தலைவர் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றும் ரச்சிதா மைனாவுக்கு ஆதரவாக விளையாடினார் என்றும் குற்றச்சாட்டினை வைத்தார்.இதற்கு சாட்சிகளாக மைனாவும் ஷிவினும் வர மறுத்து விட்டனர். இதனால் கடுப்பான தகலக்ஷ்மி இனிமேல் எப்படி விளையாடுகிறேன் என்று பார் என ஆயிஷாவிடம் புலம்பிக் கொண்டு இருக்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement