• Apr 20 2024

முதல் முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் ஒற்றுமையாக இருந்த ஹவுஸ்மேட்ஸ்- இதோட போதுமய்யா விட்டிடுங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் இந்த வாரம் முழுவதும் கெட்ஸ் வந்து கொண்டே இருக்கின்றார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி tருகை தந்திருந்தனர்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் Guest வருகிறார்கள் என போட்டியாளர்கள் குதூகலாமாகி இருந்த நிலையில், அவர்கள் வந்து பலரின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என அனைத்து விஷயங்களையும் கூறியதால், ஏன் அவர்கள் வருகை தந்தார்கள் என்பது போல போட்டியாளர்கள் கதி கலங்கியும் போயிருந்தனர்.


அப்படி ஒரு சூழலில் இரண்டாவது நாளில் இன்று, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். இவர்களும் போட்டியாளர்களிடம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி, முந்தைய நாட்களில் கேம் ஆடிய விதம் குறித்தும் நிறைய கேட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் போட்டியாளர்கள் அனைவரும் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தருவதற்கு முன்பாக வெளியே நின்றபடி பார்வதி மற்றும் ஷோபனா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், "என்ன ரெடியா?" என போட்டியார்களிடம் கேட்கின்றனர். ஆனால் போட்டியாளர்களோ ரெடி இல்லை என்பது போல கூறிக்கொண்டு நேராக கதவருகே சென்று அதை பிடித்து அவர்களை உள்ளே வர முடியாமல் செய்தது போலவும் செய்து சைகை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.அனைத்து போட்டியார்களுமே கதவருகே சென்று நின்று கதவை திறக்க முடியாதபடி செய்து ஜாலியாக கத்தியபடியும் இருக்கின்றனர்.


 முன்னதாக சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அகமது மீரான் ஆகியோர் வந்திருந்து பல கருத்துக்களை கூறியிருந்தது போட்டியாளர்களை அதிகம் கதிகலங்க வைத்திருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் புதிதாக இனி யாரும் Guest என வர வேண்டாம் என்பது போல அனைத்து போட்டியாளர்களும் ஒற்றுமையாக இருந்து ஜாலியாக செய்த இந்த விஷயம் பெரிய அளவில் பிக் பாஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement