• Apr 24 2024

மிட்வீக் எவிக்‌ஷனில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மைனா நந்தினி போட்ட முதல் வீடியோ- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோலகலமாக ஆரம்பித்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. ஷிவன் அசீம் விக்ரமன் ஆகியோரே இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றார்கள். இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.

மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன், கதிர் ஆகிய 6 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தனர். ஆனால் கதிர் ரூ.3 லட்சம் பண மூட்டையுடனும் அமுதவாணனும் 11.75 லட்சம் ரூபாய் பணப் பெட்டியுடனும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 


அதேபோல், மைனாவும் மிட்வீக் எவிக்‌ஷனில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.இந்த எவிக்ஷன் யாராலும் எதிர்பார்க்காத ஒன்றாகவே நடைபெற்றது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மைனா மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று போட்டிருக்கின்றார். அதில் இத்தனை நாட்களாக எனக்காக சர்ப்போட் பண்ணிய எல்லா மக்களுக்கும் நன்றி நீங்க இல்லாமல் நான் இத்தனை நாட்களாக அந்த வீட்டுக்குள்ள இருந்திருக்க முடியாது என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ


Advertisement

Advertisement

Advertisement