• Apr 17 2024

வெளியாகிறது ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு பாடிய 'மாமன்னன்' படத்தின் முதல் சிங்கிள்... படக்குழு அறிவிப்பு..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தற்போது 'மாமன்னன்' திரைப்படம் தயாராகி வருகின்றது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


அத்தோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் உடைய முதல் தோற்ற போஸ்டர் வெளியானது. இதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

இதனையடுத்து 'மாமன்னன்' படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அதிகாரபூர்வமாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. 


இந்நிலையில் தற்போது மற்றுமோர் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 'மாமன்னன்' படத்தின் முதல் பாடல் வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அந்தவகையில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வைகைப்புயல்' வடிவேலு இப்பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பாடல் ஆனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டிய வண்ணம் இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement