• Apr 25 2024

துணிவு படத்தின் முதல் விமர்சனம் வெளியானது..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.இப்படமானது அடுத்த ஆண்டு பெங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது .மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார்.

மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.



நேற்று மாலை வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து Youtubeலும் பல சாதனைகளை படைத்தது வருகிறது.

இவ்வாறுஇருக்கையில், துணிவு படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. துணிவு படத்தை சென்சார் பார்டில் பார்த்த குழுவினர் அனைவரும், படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இப் படம் அருமையாக இருக்கிறது என்றும் இது அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம ட்ரீட்டாக அமையும் என்றும் தங்களது விமர்சனத்தை கூறியுள்ளார்கள். 


Advertisement

Advertisement

Advertisement