Monday, August 8, 2022

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பைனல் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை கிடையாதாம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்பது தெரிந்து விடும்.

இவ்வாறு இருக்கையில் தற்போது நிரூப் ,பிரியங்கா, அமீர், பாவ்னி, ராஜு என 5பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளார்கள். மேலும் இதில் முன்னாள் போட்டியாளர்கள் திடீரென சர்ப்ரைசாக வருகை தந்திருக்கின்றனர். இந்நிலையில், வரும் ஞாயிற்று கிழமை மாலை 6 மணி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி பைனல் துவங்கும் என்று அறிவித்திருந்தனர்.

இது லைவ்வாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று தான் தற்போது வரை அனைவரும் நினைத்து வருகிறார்கள்.ஆனால், லைவ் என்று எதிர்பார்த்த அனைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பிக் பாஸ் பைனல் லைவ் கிடையாதாம். பைனல் போட்டியின் படப்பிடிப்பு நாளை சனிக்கிழமை நடக்கவுள்ளதாம்.இதிலிருந்து எடுக்கப்படும் காட்சிகளை ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்