• Apr 25 2024

'AK 62' படத்தின் ஓடிடி உரிமையைத் தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாகத் திகழ்ந்து வருபவர் அஜித். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அந்தவகையில் இவர் நடித்துள்ள 'துணிவு' திரைப்படமானது வருகிற 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது. 


'துணிவு' படத்தினைத் தொடர்ந்து 'ஏகே 62' இல் நடிக்கவுள்ளார் அஜித். இவரின் 62-ஆவது இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாகவும், மும்முரமாகவும் நடைபெற்று வருகின்றன. 


அத்தோடு அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக 'ஏகே 62 'என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் உடைய ஷூட்டிங் நிகழ்வுகளே இன்னும் ஆரம்பமாகாத நிலையில், 'ஏகே 62' படத்தின் உடைய ஓடிடி உரிமை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அந்தவகையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள துணிவு படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ள ஏனைய நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளார்களாம்.

Advertisement

Advertisement

Advertisement