• Apr 24 2024

ஓடிடியிலும் மாஸ் காட்டும் 'லவ் டுடே'... கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மற்றும் ரசிகர்களைக் அதிகளவில் கவர்ந்த படம் என்றால் அது சமீபத்தில் வெளிவந்த 'லவ் டுடே' படம் தான். இப்படத்தை 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி இதில் நடித்தும் இருக்கிறார். மேலும் லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிகரித்து வந்தது.


அதாவது செல்போன் மாறிய பிறகு அவர்களின் காதல் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். நவம்பர் 4-ஆம் தேதி வெளியான இத்திரைப்படமானது முதல் நாளில் பெரிதாக கலெக்சன் எதுவும் இல்லை. ஆனால் பின்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டன. 

இந்நிலையில் தற்போது இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அந்தவகையில் இப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து சில நாட்களிலேயே எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கப்போடு போட்டு வருகின்றது.


மேலும் இந்தப் படம், தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், லவ் டுடே திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இந்தப் படத்தை தியேட்டர் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள், நள்ளிரவு முதலே நெட்பிளிக்ஸில் கண்டுகளித்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாது ஓடிடியிலும் யாரும் எதிர்பார்க்க முடியாத வரவேற்பு லவ் டுடே படத்திற்கு கிடைத்துள்ளதாம். அதாவது வெளியானது முதல் இந்தப் படத்திற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement