• Apr 25 2024

“தி லெஜெண்ட்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு 10 பிரபல நடிகைகளை அழைத்த படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் தான் அருள் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் “தி லெஜெண்ட்”. இந்தப்படத்தினை இயக்குநர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பெரிய பட்ஜெட்தில், அதிரடி ஆக்சன் சண்டைக்காட்சிகளுடன் உருவாகிய இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதோடு விரைவில் திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கின்றது.

இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, இப்படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா வரும் மே 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

அந்த வகையில், இந்த ஆடியோ லாஞ்சிற்கு பிரபல நடிகைகளான, பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்ஷிகா, ஊர்வசி ரவுடேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகிய நடிகைகள் கலந்து கொள்கின்றார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் மொத்தம் 10 செல்ல குட்டிகள் வருகிறார்களா..? என டிக்கெட் எடுக்க ஆரம்பித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement