• Apr 20 2024

பீஸ்ட் படத்தின் வெற்றியை கொண்டாடும் படக்குழுவினர்- அப்போ இதில நம்ம தளபதி இல்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கினார். படம் ஆரம்பித்த காலக்கட்டத்திலே ஏதோ ஒரு பிரச்சினையினால் படப்பிடிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது. முதல் படமே கைகொடுக்காததால் தவித்து வந்த நெல்சன் மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்க சென்றார்.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை இயக்கிவந்த நெல்சன் கடந்த 2018 இல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இயக்குநர் நெல்சனுக்கு திருப்பு முனையாகவும் இருந்தது.

அந்தவகையில் இதுவே இவரது முதல் படம். நல்ல வசூலையும் பிளாக் பாஸ்டர் படமாக அமைந்தது. இதையடுத்து சிவகாத்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். காமெடி படமான இது கடந்தாண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் டாக்டர் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து தளபதி நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கினார் எதிர்பார்த்தளவு வெற்றியை கொடுக்காவிடினும் கலவையான விமர்சங்களையே பெற்றது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் 250 கூடி வரை வசூல் செய்தது.

பீஸ்ட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் நெல்சன், பீஸ்ட்படக்குழுவினர் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருடன் பீஸ்ட் படத்தின் உதவி இயக்குநருமான கவின் நகைசுவை நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, சுனில் ஷெட்டி ஆகியோர் உடன் சென்றுள்ளனர். இவர்களுடன் டாக்டர்,டான் பட ஹீரோயின் பிரியங்கா மோகனும் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/ccuEHJesbKM

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement