• Sep 13 2024

மீனாவுக்கும் முத்துவுக்கும் இடையில் வெடித்த சண்டை- திடீரென வந்து நின்ற மீனாவின் அம்மா- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் அண்மையில் மனோஜிற்கும் ரோகினிக்கும் திருமணம் நடைபெற்றது. இதனால் ரோகினி பற்றிய உண்மை எப்போது விஜயாவுக்கு தெரிய வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது முத்துவுக்கு கந்து வெட்டிக் காரன் தான் கஞ்சாக் கேசில் தன்னை மாட்டி விட்ட விசயம் தெரிந்து விட்டது. இதனால் மீனாவுக்கும் இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்று முத்து மீனாவிடம் சென்று சண்டை பிடிக்கின்றார்.


அப்போது அண்ணமலை என்னாச்சு என்று கேட்க முத்து நடந்த விஷயத்தைச் சொல்லியதோடு நான் உன்னால அநியாகமாக காசு கட்டி விட்டேன். அந்த காசை உங்க அப்பா வீட்டில இருந்தா கொண்டு வருவாய் என்று கேட்க மீனா எங்க குடும்பத்தை பற்றி தப்பா பேசாதீங்க என்று சொல்கின்றார்.

அப்போது முத்து மீனாவுக்கு அடிக்க கை ஓங்குகின்றார். அந்த நேரம் மீனாவின் அம்மாவும் தங்கச்சியும் உள்ளே வருகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement