சிம்புவின் மாநாடு படம் பார்க்க வந்த ரசிகர்- இப்படியான நிலையிலும் வந்தாரா ;நெகிழ்ச்சியான வீடியோ..!

205

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுகின்றது. அந்த வகையில் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து உள்ளனர்.படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்புகளை மிகுதியாக்கி நிலையில் மாநாடு படத்தை இன்று ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

கேடிஎம் பிரச்சனையால் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 8 மணிக்கு தான் மாநாடு படத்தின் முதல் காட்சியே திரையிடப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் 8.30 மணிக்கு தான் முதல் காட்சி. இந்நிலையில் மாநாடு படத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். படம் ரிலீஸானதே ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியாக இருக்கிறது.

இந்நிலையில் கால் நடக்க கூட முடியாத ஒரு ரசிகர் சிம்புவின் மாநாடு படம் பார்க்க திரையரங்கிற்கு வந்தது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதோ அந்த வீடியோ..