• Apr 20 2024

ஓடி வந்து கட்டி அணைத்த ரசிகர்.. ஜூனியர் என்.டி.ஆர் என்ன செய்தாரு தெரியுமா? வைரல் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.சமீபத்தில் கூட ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

இந்நிலையில், இப்படத்தில் இரு ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

பவுன்சர்களுடன் விழாவிற்கு வந்த ஜூனியர் என்.டி.ஆரை பார்த்த ரசிகர் ஒருவர் பவுன்சர்களையும் தாண்டி ஜூனியர் என்.டி.ஆரை கட்டிப்பிடித்தார். அப்போது பவுசர்கள் அவரை இழுத்தனர்.

ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் அந்த ரசிகரிடம் தன்மையாக நடந்துகொண்டு அவரை கட்டிப்பிடித்து புகைப்படமும் எடுத்துக்கொடுத்தார்.

அப்போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement