• Apr 17 2024

அஜித்திற்கு ஜோடியாகும் பிரபல இளம் நடிகை.. அதுவும் இவரா.. அடிச்சுது பாரு லக்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர் அஜித். இதனால் தான் இவரை ரசிகர்கள் 'தல' என செல்லமாக அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 


அதே போல் இவர் நடிப்பில் உருவாகும் படங்களோ ஏராளம். அந்தவகையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக 'ஏகே 62' என்ற படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்


அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமல்லாது இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது.

அடுத்தடுத்து இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி இருந்தாலும் இதுவரை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதாவது முதலில் நயன்தாரா என்று கூறப்பட்டது, பின் திரிஷா என தெரிவித்தனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக யார் இப்படத்தின் கதாநாயகி என்று இதுவரை காலமும் கூறவில்லை.

இந்நிலையில் அஜித்திற்கு ஜோடியாக இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக சில நாட்களாக இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வர தற்போது அது வெறும் வதந்தி தான் என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் அல்லது நயன்தாரா AK62 படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவியின் பெயர் அடிபட்டு வருகின்றது.


இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னரே அவர் நடிப்பாரா இல்லையா என்ற உண்மை நிலவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement