சீரியலில் வாய்ப்புப் பெறுவதற்காக சோகமாக போட்டோ ஷீட் நடத்திய பிரபல சீரியல் நடிகை

132

தமிழ் சின்னத்திரையில் பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்தவர்கள் அனேகமானோர் இருக்கின்றனர். அந்தவகையில் வெள்ளித்திரையில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட தற்பொழுது சீரியல் நடிகைகளுக்கு ஏராளமான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்து வருகின்றது.

அந்தவகையில் ரெட்டைவால் குருவி எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி. அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான பாசமலர், தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி மற்றும் விஜய் டிவியில் சின்னத்தம்பி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

மேலும் சின்னத்தம்பி மற்றும் ராசாத்தி சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்தார் என்று கூறுவதைவிட வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கச்சிதமாக கிராமத்து பெண்ணாகவே நடித்து அந்த சீரியல்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தார்.

தற்போது இவருக்கு தமிழில் எந்த ஒரு சீரியலிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் பவானி ரெட்டி. சமூக வலைத்தளத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதுவும் ஏதோ ஒரு சோகத்தில் சுவற்றில் சாய்ந்தபடி இருப்பது போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்து பல ரசிகர்களும் என்ன சோகமாக இருக்கும் என கேள்வி கேட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: