• Apr 25 2024

500க்கு மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல சீரியல் நடிகர் மரணம்-அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் லோஹிதஸ்வ பிரசாத். இவர் சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளதோடு தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 மேலும் பாலகிருஷ்ணா – போயபதி கூட்டணியிலான ஹாட்ரிக் படமான ‘அகண்டா’வில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவை தவிர, நடிகர் பாகுபலி பிரபாஸ் நடித்த சாஹோ, ஜூனியர் என்டிஆர் நடித்த ஜெய் லவ குசா ஆகிய திரைப்படங்களிலும், அரவிந்த சமேதா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாகவே பெங்களூரு தனியார் மருத்துவமனையில்  உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement