வடிவேலுடன் ஜோடி சேரும் பிரபல சின்னத்திரை நடிகை- உண்மையிலேயே லக்கி கேர்ள் தான்

1108

தமிழ் சினிமாவில் என்றும் யாராலும் இலகுவாக மறக்கமுடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது தெரிந்ததே.அத்தோடு சில ஆண்டுகளாக வடிவேலு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தடைகள் யாவும் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் இதனால் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலுமு் ப்ரியா சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தாலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

அத்தோடு இளம் நடிகைகள் பட்டியலில் இருக்கும் ப்ரியா பவானி சங்கர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளிப்பார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் எடிட் செய்த போட்டோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதாவது சினிமாவில் ரீ என்ட்ரி ஆகியுள்ள வடிவேலுவுடன் ஷோபாவில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படத்தை ‘தட் லக்கி கேர்ள்’ என்ற கேப்ஷனோடு பகிர்ந்திருந்தார் .அந்த புகைப்படத்தில் வடிவேலு, எலி பட கெட்டப்பில் இருந்தார். இதனால் இந்தப்படம் எலி 2 வாக இருக்குமா? என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் ‘நாய் சேகர்’ படத்தில் தான் ப்ரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.