• Sep 27 2022

“அவதார் 2” படத்தின் கதையை குப்பைத் தொட்டியில் எறிந்த பிரபல இயக்குநர்- இது உருவாக 12 வருஷம் ஆச்சா

Listen News!
stella / 3 days ago
image
Listen News!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் அவதார். உலக அளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலா சாதனையையும் இந்த படம் பெற்றிருந்தது. 

இந்த நிலையில்  12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.எதிர்வரும் டிசம்பர் 16ம் தேதி “அவதார் 2” வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வைரலாக இருந்து வருகிறது.


24 மணி நேரத்தில் 148 மில்லியன் பார்வைகளை அவதார் 2 டீசர் பெற்றது.இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜேம்ஸ் கேமரூன் “அவதார் பட வெற்றிக்கு பிறகு “அவதார் 2” க்காக திரைக்கதையை எழுத தொடங்கினேன். நீண்ட காலமாக அந்த திரைக்கதையை எழுதினேன். அதை முழுமையாக முடித்ததும் குப்பை தொட்டியில் வீசிவிட்டேன். பிறகு மீண்டும் எழுதினேன்” என கூறியுள்ளார்.


5 பாகமாக வெளியாக உள்ள அவதார் படத் தொடரில் 3வது பாகத்திற்கான படப்பிடிப்பும் முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும், 4ம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதனால் அவதார் 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%