• Apr 25 2024

நயன்தாராவை ரிஜெட் செய்த பிரபல இயக்குனர்...காரணம் இது தான்?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா இயற்பெயர் - டயானா மரியா இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


அதனை தொடர்ந்து ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார் நயன்தாரா. இவர் தற்போது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


இதனால் இவர் தமிழ் சினிமாவில் இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.இவர் அண்மையில் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது. மேலும் ஜவான், கனெக்ட், இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் நயன்தாரா ரஜினியுடன் சந்திரமுகி, அஜித்துடன் பில்லா என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார்.


இந்நிலையில், நடிகை நயன்தாராவை இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய குடைக்குள் மழை படத்தின் கதாநாயகியாக முதன் முதலில் தேர்த்தெடுத்துள்ளார்.


நயன்தாராவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்த மறுநாள் தன்னை சந்திக்க வரும்படி பார்த்திபன் கூறியுள்ளார். ஆனால், சொன்ன நேரத்திற்கு நயன்தாராவால் பார்த்திபனை சந்திக்க முடியாமல் போக  இப்படத்தில் இருந்து நயன்தாராவை தூக்கிவிட்டாராம் பார்த்திபன்.

Advertisement

Advertisement

Advertisement