நடிகை த்ரிஷா சினிமாவை விட்டுப் போகாததற்கு பிரபல இயக்குனர் தான் காரணமாம்.

266

தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்குமேல் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் இரண்டே பேர்தான். அதில் ஒன்று நயன்தாரா. இன்னொருவர் திரிஷா. இதில் த்ரிஷா நயன்தாராவுக்கு முதலே சினிமாத்துறையில் கால்பதித்து விட்டார் எனலாம். அத்தோடு ஆரம்பத்தில் சுமாரான படங்கள் தான் த்ரிஷாக்கு கிடைத்தது.

இதனால் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி விடலாம் என த்ரிஷா யோசித்தாராம். ஆனால் அப்போது தான் கடைசியாக ஹரி பட வாய்ப்பு வந்துள்ளது.அந்த வகையில் முதன் முதலாக ஹரியின் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் சாமி.

இந்த படத்தின் வெற்றியைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை த்ரிஷா.இந்த படத்தின் வெற்றி திரிஷாவுக்கு தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் பல்வேறு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து அவருடைய சினிமா வாழ்க்கையை மாற்றி விட்டது எனலாம்.

மேலும் ஒருவேளை சாமி படம் மட்டும் பிளாப் ஆகியிருந்தால் அப்படியே சினிமாவை விட்டுவிட்டு சென்றிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு தற்போது த்ரிஷா கமர்ஷியல் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: