• Apr 23 2024

பிரபல கிரிக்கெட் வீரரை நேரில் சென்று சந்தித்த காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் சூப்பர் ஹட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இளைஞர்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான்  காற்றுக்கென்ன வேலி, இந்த தொடர் கல்லூரி, காதல், குடும்பம் என்ற கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முதலில் சூர்யா மற்றும் பிரியங்கா ஜோடியாக முதலில் நடித்தார்கள். பின் சூர்யா தொடரில் இருந்து வெளியாக சுவாமிநாதன் என்பவர் நடிக்க தொடங்கினார்.

இப்போதும் இவரும், பிரியங்காவும் ஜோடி சேர்ந்து நடிக்கும் காட்சிகள் அனைத்தும்  ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.அவர்களை வைத்து நிறைய ரொமான்டிக் வீடியோக்கள் உருவாகி இன்ஸ்டாவில் வைரலாகின்றன.


காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் சுவாமிநாதன் தமிழை தாண்டி தெலுங்கிலும் ஒரு தொடர் நடித்து வருகிறார். அண்மையில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினை சந்திக்க அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.அப்புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் பகிர ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement