• Apr 25 2024

சாய் பல்லவியின் கார்க்கி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்...வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை சாய்பல்லவி.இவர் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கார்கி’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகின்றது.இந்த படத்தை ப்ளாக்கி ஜெனி மற்றும் மை லெஃப்ட் ஃபூட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஸ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இப்படத்திற்கு ஸ்ரையாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும் இந்த படத்திற்காக மூன்று மொழிகளில் சாய் பல்லவியே டப்பிங் பேசியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி பெற்றுள்ளது. எனினும் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement