• Mar 29 2024

ஆண் ஒருவரை தனது செருப்பை கழட்ட வைத்த பிரபல நடிகை.. சம்பளம் கொடுத்து என்ன வேணுமானாலும் செய்வீங்களா? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் காதல் நகைச்சுவைத் திரைப்படமான 'Dum Laga Ke Haisha' என்ற அதிக எடை கொண்ட மணமகள் காதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை பூமி பெட்னேகர். இந்தப் படமானது அவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.

இதனையடுத்து பல படங்களிலும் நடித்து வருகிற இவர் தற்போது சர்ச்சை நாயகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதாவது சமீபத்தில் காருக்குள் வைத்து ஆண் நண்பர் ஒருவருக்கு லிப் கிஸ் கொடுத்த பூமி பெட்னேகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தற்போது அடுத்த சர்ச்சையில் மாட்டியிருக்கிறார் நடிகை பூமி பெட்னேகர். அதாவது இவர் சமீபத்தில் கலந்து கொண்ட விழாவில், குத்து விளக்கேற்ற அவரை மேடைக்கு அழைத்தனர். அப்போது அவர் தனது காலணியை கழற்ற முயன்றார்.


ஆனால் அவரால் அதனைக் கழற்ற முடியவில்லை. இதனால் தனது உதவியாளரை அழைத்து செருப்பை கழற்ற வைத்தார் பூமி பெட்னேகர். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சம்பளம் தருபவர் என்றால், செருப்பை எல்லாம் கழற்ற வைப்பீர்களா என விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement