• Sep 26 2023

சுஷாந்த் சிங் உயிரிழந்து கிடந்த வீட்டை பயமின்றி வாங்கிய பிரபல நடிகை- அடடே இந்த நடிகை தான் வாங்கினாரா?

stella / 4 weeks ago

Advertisement

Listen News!


ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தவர் தான் நடிகர் சுஷாந்ந் சிங் ராஜ்புட். இவர் தோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபல்யமானார். தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பார் என்று பார்த்தால்  கடந்த 2020 ஜூன் மாதத்தில் உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. சர்ச்சைக்குரிய விஷயமாவே பேசப்பட்டு வருகின்றது.சுஷாந்தின் உடல் கண்டெடுக்கப்பட்ட வீடு தற்போது வரை காலியாக தான் இருக்கிறது. அந்த வீட்டுக்கு குடிவர பயம் காரணமாக யாருமே முன்வரவில்லை.


சுஷாந்த் சிங் உயிரிழந்து கிடந்த வீட்டை தற்போது பிரபல நடிகை அடா ஷர்மா வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மும்பையின் பாந்த்ரா வெஸ்ட் பகுதியில் இருக்கும் அந்த duplex 4BHK அபார்ட்மெண்ட் சுமார் 2500 சதுர அடிக்கும் அதிகமானது .அடா ஷர்மா எவ்வளவு கொடுத்து வாங்கினார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement