பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாடகைக் கணவரை அழைத்து வந்த பிரபல நடிகை- அதிர்ச்சியில் பார்வையாளர்

1991

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் ரியாலிட்ரி ஷோவாக இருப்பது பிக்பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சியானது ஹிந்தி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழில் 5 வது சீசனும் ஹிந்தியில் 15வது சீசனும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் ஹிந்தி பிக்பாஸில் வயில்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர் தான் நடிகை ராக்கி சாவந்த் . இவர் பிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் . இந்நிகழ்ச்சியில் அவருடன் காதல் கணவரான ரித்தேஷும் வந்திருக்கிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் முதல்முறையாக கணவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ராக்கி.

தனக்கு திருமணமாகிவிட்டது என்று முன்பு ராக்கி தெரிவித்தபோது அவர் பொய் சொல்கிறார் என்றே அனைவரும் நினைத்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ரித்தேஷை பார்த்த சல்மான் கானோ, இவரை வாடகைக்கு அழைத்து வந்திருக்கிறீர்களா என ராக்கி சாவந்தை கேட்டார்.அதற்கு ராக்கியோ, இல்லை, இல்லை, இவர் தான் என் ஒரே கணவர் என்றார்.

சல்மான் கானுக்கு ஏற்பட்ட அதே வாடகை கணவர் சந்தேகம் தான் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறதுஅவர்கள் இன்னும் ராக்கியை நம்பத் தயாராக இல்லை. ராக்கி பற்றி ரித்தேஷ் கூறியதாவது, ராக்கி பொய் சொல்ல மாட்டார். அவர் சொன்னது அனைத்தும் உண்மை. திருமணத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று நான் தான் அவரிடம் கூறினேன். என் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன்.

எனக்காக அவர் பல அவமானங்களை தாங்கியிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.