• Apr 20 2024

தனது செல்ல நாய்க்குட்டியை கண்டு பிடித்து தந்தால் 10,000 டாலர்கள் தருவதாக அறிவித்த பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவூட் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் தான் பாரிஸ் ஹில்டன். இவர் அண்மையில் டைமண்ட் என பெயரிடப்பட்டு இருக்கும் தன் செல்ல நாயை ஒரு வாரமாக காணவில்லை, அது மிகவும் வலியை தருகிறது என குறிப்பிட்டு இருந்தார்.


மேலும் தனது நாய்க்குட்டியைக் கண்டு பிடித்து தருபவருக்கு பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன்படி 10,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின் படி 8,12,555 ருபாய் தருவதாக அறிவித்துள்ளார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருவதோடு பலர் நாய்க்குட்டியைத் தேடும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர் எனலாம்.


மேலும் பொதுவாக பிரபலங்கள் செல்லப் பிராணிகளை அதிகமாக வளர்த்து வருவதோடு அவற்றோடு தமது  நேரத்தை செலவழித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement