மக்கள் செல்வனை தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்த பிரபல நடிகர் – எப்படி எல்லாம் புகழ்ந்தார் தெரியுமா?

152

தமிழ் சினிமாவில் முன்ணணி கதாநாயகனாக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவருடைய படங்கள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும் அதில் இவருடைய நடிப்பு போச்சு இவருடைய ஒவ்வொரு அசைவுமே மக்கள் ரசித்து பார்க்க கூடிய மாதிரி இயல்பானதாக இருக்கும்.

அதுமட்டுமல்லாது பக்கத்து வீட்டு பையன் போல இருக்கிறார் என்றும் ரசிகர்கள் சொல்வார்கள் . இவருக்கென ஒரு தனித்துவமான ரசிகர் பட்டாளமே இருக்கு . சற்றுமுன்னர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன்சிங், லாஸ்லியா, அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் படத்தில் ஸ்னிக்பிக் வீடியோவை வெளியிட்டார்.

சுமார் 8 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் கதாநாயகன் ஹர்பஜன்சிங் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தொரிவித்துள்ளார்.

ஹர்பஜன்சிங் கூறியிருப்பதாவது சேது ஜி விஜய்சேதுபதி ரொம்ப நன்றி.” ஒரு வாரத்துக்கு 3 படம் கொடுக்கும் நீங்கள் ஓய்வு என்னும் வார்த்தையை உதறிய சினிமா துறவி”. உங்கள் உழைப்பு! முயற்சி! ஆளுமை! மனிதர்களை மதிக்கும் குணம்! தலைகனம் இல்லா பண்பு! எல்லாம் தாரு மாரு.நடிப்பு அரக்கன்னா சும்மாவா. பஜ்ஜி ஹாப்பி அண்ணாச்சி! என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.