• Dec 07 2022

'தளபதி 67' படத்தில் இருந்து வெளியேறிய இயக்குநர்..இது தான் காரணமாம்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

  தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்.இவர் நடிக்கவிருக்கும்  67 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவர முன்னரே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. எனினும் இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்ட இயக்குநர் ஒருவர் தற்போது விலகி கொண்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தில் சஞ்சய் தத், விஷால், கௌதம் மேனன், மிஷ்கின், நிவின் பாலி, பிரித்விராஜ் உள்பட ஒரு சில பிரபலங்கள் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் இந்த நிலையில் தற்போது ’தளபதி 67’ படத்தில் இருந்து மிஷ்கின் விலகிவிட்டதாக சொல்லப்படுகின்றது. மிஷ்கின் இயக்கிய ’பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விஜய் சேதுபதியிடம் மிஷ்கின் ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதை விஜய் சேதுபதிக்கு பிடித்து விட்டதால் உடனே இந்த படத்தை ஆரம்பிக்கலாமென கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் தெரிகின்றது.


இதனை அடுத்து ’தளபதி 67’ படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ள மிஷ்கின், விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்தின் திரைக்கதையை தயார் செய்யும் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகுமென்றும் கூறப்படுகிறது.