குக் வித் கோமாளியின் உறுதியான வின்னர் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

43779

தமிழ் சின்னத்திரையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி”.இதில் சீசன் 1 தொடர்ந்து சீசன் 2 கடந்த 2020 தீபாவளி அன்று துவங்கி மிகவும் வெற்றிகரமாக மக்களின் பேராதரவில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதும் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த பைனல் போட்டியாளர்களாக பாபா பாஸ்கர், கனி, அஸ்வின் பவித்ரா, ஷகீலா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்த பைனல் நிகழ்ச்சி வரும் தமிழ் புத்தாண்டு அன்று தொடர்ந்து 5 மணி நேரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்ததே.

மேலும் குக் வித் கோமாளி சீசன்2 இன் ரைட்டல் வின்னர் யார் என்பது பற்றி பலர் கலந்துரையாடி வந்த நிலையில் பலரும், சீசன் 2 வின் வெற்றியாளர் ”பாபா பாஸ்கர்” தான் என்று கூறி வந்தனர். சமீபத்தில் தான் பைனல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அதன் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிலையில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னர் ”கனி” என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது மற்றும் கனிக்கு பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த வருகின்றனர்.